ரஜினிகாந்தும், லாக்டவுன் அரசியல் பேச்சும்…! திமுகவை வீழ்த்த வந்த 3 பேர்..! ஸ்டாலின் ‘ஷாக்’

1 July 2020, 1:26 pm
Rajini 10 updatenews360
Quick Share

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் 2021ம் ஆண்டு அரசியலில் கூட்டணி வைக்க 3 முக்கிய அரசியல் தலைவர்கள் மெனக்கெட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போ வருவேன், எப்படி வருவேன் சொல்லமாட்டேன்… ஆனா வரவேண்டிய நேரத்தில் டக்னு வருவேன் என்று சொல்லிக் கொள்ளும் ரஜினியின் அரசியல் டார்க்கெட் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான்.

Rajini-Updatenews360 (2)

கனஜரூராக அதற்கான பணிகளில் சுறுசுறுப்பாக களம் இறங்கிய ரஜினியையும், அவரது கட்சி வேலைகளையும் கொரோனா ஊரடங்கு பதம் பார்த்துவிட்டது. அனைத்து கட்சிகளும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க ரஜினி முடங்கி இருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் சுறுசுறுப்பாக தமது 2021ம் ஆண்டு அரசியல் பிளான் பற்றி ஆலோசித்து வருகிறாராம். அவரை 3 முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி வருகிறாராம்.

லாக்டவுன் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வீடியோ மூலம் தான் நடக்கிறதாம். கூட்டணி அமைய வேண்டும், அதுவும் உங்கள் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்பது தான் அந்த முக்கிய தலைவர்களும் அடிக்கோடிட்டு காட்டும் விஷயமாம்.

அதிமுக அதுவாகவே இந்த தேர்தலில் காணாமல் போய்விடும். ஒரே அரசியல் எதிரி திமுக. அதை வீழ்த்த சரியான கூட்டணி அவசியம். எனவே தமிழகத்துக்கு உங்கள் தலைமை இப்போது தேவைப்படுகிறது என்று பேசி வருகிறார்களாம். இந்த மூவரில் ரஜினியும் நெருங்கிய நண்பரும் இருக்கிறாராம்.

அதில் இருவர் தேசிய கட்சியில் தமிழக அளவில் பிரபலமானவர்கள். ஓபனாகவே இன்றும் ரஜினியை ஆதரிப்பவர்கள். அந்த மூன்றாமவர் ஒரு அரசியல் தலைவராம். ரஜினியின் அரசியல் வருகையை பாராட்டியவர். தமது கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி கூட்டணிக்கு அடிபோடுகிறாராம்.

rajini - eps - stalin - updatenews360 (2)

இப்படி அரசியல் சங்கதிகள் போயஸ்கார்டனில், சத்தியமூர்த்தி பவனிலும், அசோக் நகரிலும் எதிரொலிக்கிறதாம். ஆனால் எவருக்கும் ரஜினி பிடி கொடுக்காமல் தமது அண்ணாமலை சைக்கிளை உருட்டிக் கொண்டிருக்கிறாராம். அக்மார்க் பதிலாக, நேரம் வரும் போது இதுபற்றி என்று பேசி வருகிறாராம்.

ரஜினியின் லாக்டவுன் அரசியல் ஒரு பக்கம் இருக்க….. இது பற்றி அறிவாலயத்துக்கும் சீக்ரெட் தகவல் போயிருக்கிறதாம். வயதான பெரியாரே என்று ரஜினியை மறைமுகமாக உதயநிதி தாக்கி உள்ளது குறித்து ரஜினியின் கோபமும் அவர்கள் நினைவுக்கு வந்து போனதாம்.

அதோடு திமுகவுடன் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஒன்றும் ரஜினியுடன் கூட்டணி ராகம் பாடி வருகிறதாம். அதையறிந்த ஸ்டாலின் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம் என்று அண்ணாமலை சைக்கிள் கணக்காய் ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறதாம்…!

Leave a Reply