இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நிறுத்தம் : மறுதேர்வு தேதி இன்று வெளியாகிறது

19 September 2020, 12:32 pm
Chennai University- updatenews360 -min
Quick Share

சென்னை : இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நிறுத்தப்படுவதாக சென்னை பல்கலை., அறிவித்துள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 21 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் என்றும், தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆன்லைனில் நடக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று, இன்று மாதிரி தேர்வுகள் நடப்பதாக இருந்தது. இதற்காக, மாணவர்களுக்கு மாதிரி தேர்வுக்கான விபரங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி தேர்வை எழுத முயன்ற மாணவர்களுக்கு இணையபக்கம் எதுவும் முறையாக ஓபன் ஆகவில்லை. இதனால், மாணவர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து, மாதிரி தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும், மறு மாதிரி தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாகவும் சென்னை பல்கலை., அறிவித்துள்ளது.

Views: - 9

0

0