தில் இருந்தா அண்ணாமலை போட்டியிடட்டும்.. வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 10:00 pm
Anitha Radhakrishnan
Quick Share

தில் இருந்தா அண்ணாமலை போட்டியிடட்டும்.. வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் திமுகவின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “நான் அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். தைரியம், திராணி இருந்தால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா? அண்ணாமலை இங்கு போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. அப்படி அண்ணாமலை நின்று டெபாசிட் வாங்கிவிட்டால் நாங்கள் அரசியலை விட்டே போய்விடுகிறோம்.

எனது சவாலை அண்ணாமலை ஏற்று இங்கு நிற்பாரா? நிற்பதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? இங்கு அண்ணாமலை நின்றால், டெபாசிட் என்ன, தமிழ்நாட்டை விட்டே துரத்தும் வேலையை திமுகவினர் சொல்வார்கள்.

இந்த இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என பாஜகவினர் கனவு காண்கிறார்கள். சில அமைச்சர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. என் மீதும் தான் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. என்ன செய்து விடுவீர்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.

Views: - 297

0

0