தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி : கோரா நாவலை மொழிப்பெயர்த்த கா.செல்லப்பனுக்கு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 9:14 pm
Sahitya Academy Chellappan 1 - Updatenews360
Quick Share

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கா.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கா.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவீந்தரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காக முனைவர் கா.செல்லப்பனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பன், விஸ்வநாதன் மற்றும் சௌந்தரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

ஆங்கிலத்துறையில் பேராசிரியராக பணியாற்றிய செல்லப்பன் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 234

1

0