சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது : தி.மு.க., எம்.பி. கனிமொழி..!

10 September 2020, 11:40 am
kanimozhi-01-updatenews360
Quick Share

சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பது மனிதாபிமானமற்றது என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பேருந்து, விமானம் மற்றும் ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட 4வது கட்ட தளர்வில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ஆண்களுக்கு சிறப்பு ரயிலில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் அனைத்து விரைவு ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கு கட்டண சலுகை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பது மனிதாபிமானமற்றது என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 5

0

0