எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்த ஸ்டாலின் கனவு பலிக்காது : மரக்காணம் விழாவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 4:29 pm
EPS- Updatenews360
Quick Share

விழுப்புரம் : கட்சியில் உள்ள எட்டபர்களை முகத்திரை தற்பொழுது கிழிக்கபட்டுள்ளது என மரக்காணம் விழாவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் அவர்களின் இல்ல காதணி விழாக்கு வருகை புரிந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காதணி விழாவில் குழந்தைகளை வாழ்த்தினார்.

விழாவிற்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி ஆர்பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்சி சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ச்சுனன், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழா மேடையில் எடபாடி பழனிசாமி பேசியதாவது : நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைத்துகூட பார்க்கவில்லை இருபெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து வெற்றி அடைந்து நம்மிடம் இந்த கட்சியை கொடுத்துள்ளனர்.

அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்கள் முகத்திரை தற்பொழுது கிழிக்கபட்டு விட்டது. அவர்கள் இதுநாள் வரை நம்முடன் இருந்து கட்சியை வலுவிழக்கச் செய்துள்ளார்கள்.

நாம் 2021 ல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது. நம்மோடு இருந்தவர்கள் தான் எட்டப்பர் வேலை சூழ்ச்சி செய்து கொண்டு வெற்றி தடுத்தவர்கள்.

இன்றையதினம் இந்த கட்சியை இழக்க பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதிமுக தொண்டர்கள் உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக கட்சி.

ஸ்டாலின் அவர்களே எங்களுடன் இருக்கும் எட்டப்பர்களை வைத்து அதிமுக விழ்த்த நினைத்தால் இனி அது நடக்காது என அவர் பேசினார்.

Views: - 603

0

0