கும்பகர்ண தூக்கம் கலைந்தது : போலிப் போராளியாக மாறிய சூர்யா! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 9:01 pm
NEET Surya -Updatenews360
Quick Share

2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அரியலூர் அனிதா.

நீட் தேர்வுக்கு நடிகர்கள் எதிர்ப்பு குரல்

அப்போது அவரை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டு வழக்கு தொடர வைத்ததாகவும்
கூறப்படுவதுண்டு. ஆனாலும் சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து இறுதி தீர்ப்பு அளித்ததால் மனமுடைந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு நடந்தது.

Aravism 🐘 Rajabheema on Twitter: "First Year Death Anniversary. #Anitha  #Social_Injustice #Neet #NeetKilledAnitha… "

அப்போது தமிழகமே கொந்தளித்தது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் அனிதாவுக்காக கண்ணீர் வடித்தனர்.

நடிகர்கள் ரஜினி, கமல்,விஜய் சூர்யா, விஷால், விஜய்சேதுபதி, சித்தார்த் இயக்குனர் ப.ரஞ்சித் என்று 50க்கும் மேற்பட்டோர் அறிக்கை வெளியிட்டு வேதனையும் தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா எதிர்ப்பு

சூர்யாவைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு நீட் தேர்வு கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர். கடந்த ஆண்டு நீட் தேர்வு பயத்தால் தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

This film of Surya had ruled box office | NewsTrack English 1 NT

அப்போது அவர் வெளியிட்ட அனல் பறந்த அறிக்கையில், “கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

நீர்த்துப்போன திமுகவின் நீட் வாக்குறுதி

இந்த நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் தேர்தலின்போது தீவிர பிரச்சாரமும் செய்தனர்.

Young women's wing idea of 'rising son' may eclipse aunt - DTNext.in

இதனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு நடக்காது என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது.

Stalin elected DMK president unopposed | MK Stalin | Stalin DMK president |  Kanimozhi | Tamil Nadu politics | Onmanorama

ஆனால் திமுக அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே கடந்த 12-ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

தமிழகத்தில் தொடர்ந்த நீட் மரணம்

தேர்வு நடப்பதற்கு முதல் நாள் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும், தேர்வு எழுதிய பிறகு அரியலூரைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் காட்பாடி மாணவி சௌந்தர்யா ஆகியோரும் தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டனர்.

20-year-old NEET aspirant Dhanush dies by suicide in Tamil Nadu | The News  Minute

இந்த நிலையில்தான் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக “ஒரு பரீட்சை உயிரை விட பெரிது அல்ல” என்ற தலைப்பில் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய உருக்கமான ஒரு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டார். அவருடைய இந்த வீடியோ பேச்சு நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அவர்களின் ட்விட்டர் பதிவுகள் இதோ:

நீட்டுக்கு எதிராக குரல் உயர்த்தி கத்தியவர்கள் எல்லோரும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அடங்கிப்போனார்கள். இந்த கூத்தாடியை பாருங்களேன் வாய் அசைகிறது. சத்தமே இல்லை… இவர் இப்படி பேசமாட்டாரே!… யார் மீது உள்ள அச்சம்? நரம்பு புடைக்க பேசுபவருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிட்டது போல…

Madras HC judge calls for action against actor Surya for dig at judiciary  over NEET | India News,The Indian Express

Tone மாறுதே. ஏன், அதிமுக ஆட்சி என்றால் இஷ்டத்துக்கு பேசுறது, இப்ப கரிசனம். நல்லாயிருக்குய்யா உங்கள் நடிப்பு. தயவுசெய்து சமுதாய அக்கறை என்று இனி ஒருபோதும் உருட்டாதீர்கள்.

உங்கள் சமூக அக்கறை மீது என்றும் மதிப்பு உண்டு. ஆனால், உங்கள் சமீப நிலைப்பாடுகளில் அரசியல் சார்பும் கலந்துவிட்டதோ என தோன்றுகிறது. இதே வீடியோவை போன ஆட்சியில் மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்தபோது நீங்கள் வெளியிட்டிருந்தால் இந்த ஐயம் எழுந்திருக்காது.

இதையே அதிமுக ஆட்சில சொல்லிருந்தா பரவாயில்ல. அப்போ நீட் தேர்வு நடக்க கூடாதுனு கம்பு சுத்தீட்டு இப்போ பம்மிகிட்டு இருக்க. இப்போ எதிர்த்து கேளு ஏன் பயமா?…

உனக்கு திராணி இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று அறிவித்தார்கள். அதை நிறைவேற்ற வக்கில்லாத அரசே என கேள்வி கேட்க உனக்கு தைரியம் இருக்கா!!

அது என்ன சார், உங்களுக்கு போன ஆட்சி இருக்கும்வரை நீட் நடத்திய அரசை எதிர்த்து ரத்தம் கொதிச்சுது. இப்போ அதிகார வர்க்கம் தந்த பொய் வாக்குறுதியால் உயிர்விட்ட பிள்ளைகள் பிணம் மீது நின்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள். உங்கள் போலி போராளி முகம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.

ரசிகர்கள் பாராட்டு

சூர்யாவின் உருக்கமான வீடியோ பேச்சு கேட்டு அவருடைய ரசிகர்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

உள்நோக்கம் இருக்கா இல்லையா என்பதை விட சொன்னது நல்ல கருத்து. தேவையான கருத்து பாராட்டுக்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு தரும் சமூக அக்கறை கொண்ட வீடியோ.

Surya releases the trailer of Karthi's 'Dev' | Tamil Movie News - Times of  India

கடந்த காலங்களில் பேசிய அதே சப்ஜெக்டடுதான். ஆனால் கதைக்களமும் காலமும்தான் வேறு. பாரதியின் பாட்டை மேற்கோள் செய்தமைக்கு நன்றி! சொல்ல ஒன்றும் இல்லை. நெஞ்சில் உரமும்,நேர்மைத் திறமும் இன்றி பேசித் திரிவாரடி கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி!! இப்படிக்கு உண்மையான ரசிகன்…

சூர்யா கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

இதுபற்றி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “2017 மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டபோது அதற்காக தமிழ் திரையுலகமே கொதித்து எழுந்தது. அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போதெல்லாம் இவர்களின் கண்டன குரல்கள் வெடிக்கும். ஆனால் 2021 ஜூன் மாதத்திற்கு பிறகு இவர்களின் குரலைக் கேட்க முடியவில்லை.

Actor Siddharth compares Tejasvi Surya to Ajmal Kasab after BBMP  bed-for-bribe scam finds communal twist - Oneindia News

குறிப்பாக நடிகர் சூர்யா, சித்தார்த் போன்றோர் தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது பற்றி வாயே திறக்கவில்லை. சித்தார்த்திடம் ட்விட்டரில் இதுபற்றி சிலர் கேள்விகளை எழுப்ப அதற்கு பதில் சொல்ல முடியாமல் கோழைபோல் தனது டுவிட்டர் கணக்கையே மூடிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்.

நடிகர் சூர்யாவை பொறுத்தவரை இந்த விஷயத்தில் நத்தை வேகம் காட்டுகிறார் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய கடந்த ஜூன்மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம்
கடைசி நேரத்தில்தான் தனது கருத்தை சூர்யா பதிவு செய்தார். ஒருவேளை இந்தக் குழுவால் ஒரு பயனும் இல்லை என்று நினைத்து தாமதமாக கருத்து சொன்னாரா? என்பது தெரியவில்லை.

சூர்யா கும்பகர்ணன்

அதேபோல்தான் தற்போது 3 மாணவ- மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட ஒரு வாரத்திற்கு பின்பு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தவர்போல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் இதற்கு முன்பு இதுபோல் எந்தவொரு வீடியோவையும் மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் நோக்கில் வெளியிட்டதில்லை.

இது, அவரிடமிருந்து வந்த குரல் மாதிரியும் தெரியவில்லை. அவரை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது.

சினிமாவில் அவருக்காக சிலர் வசனம் எழுதி தருவதுபோல் நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக எழுதிக்கொடுத்ததுபோல உள்ளது. உண்மையிலேயே அவருக்கு இறந்த மாணவர்களின் மீது அக்கறை இருக்குமேயானால், 3 நாட்களுக்கு முன்பே இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கவேண்டும்.

மாணவர்களின் நலனில் எனக்கு எப்போதுமே அக்கறை உண்டு என்று மார்தட்டிக் கொள்ளும் சூர்யா, தனக்கு பிடித்தமானவர்கள் தப்பு செய்தால் அதுபற்றி வாயே திறக்க மறுப்பதும், பிடிக்காதவர்கள் தவறு செய்தால் முரட்டு சிங்கம் போல் பாய்ந்து வீரம் காட்டுவதும் அழகல்ல.

gang: Surya: Dubbing in Telugu for 'Gang' was an incredible experience |  Telugu Movie News - Times of India

நடுநிலை என்றால் எப்போதும் ஒரே மாதிரியாக குரல் ஒலிக்கவேண்டும். ஒரே அளவுகோலையே பயன்படுத்தவேண்டும். இதுதான் சமநீதி, சமூக நீதிக்கான அடையாளம். இல்லையென்றால் கருத்தே சொல்லக்கூடாது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடந்தது பற்றி அவர் பேச மறுப்பது யாருக்கோ பயந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது. இதனால்தான் சமூகப் போராளி என்று அவருடைய ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்ட சூர்யா தற்போது போலிப் போராளி என்று அவப்பெயர் சூட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது” என்று நெட்டிசன்கள் கவலையுடன் குறிப்பிட்டனர்.

Views: - 304

1

0