நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்…!!

17 April 2021, 1:28 pm
vivek - police respect - updatenews360
Quick Share

மறைந்த நடிகர் விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலகங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்களும், பிரபலங்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கிற்கு, உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியது. இதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கலை மற்றும் சமூக சேவைகளின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் விவேக் எனவும் புகழாரம் சூட்டியுள்ளது.

Views: - 47

0

0