நெஞ்சுவலிக்காக சிகிச்சைக்கு சென்ற ஞானதேசிகனுக்கு கொரோனா : அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!!

16 November 2020, 7:02 pm
gnanadesikan- updatenews360
Quick Share

சென்னை : நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று திடீர் நெஞ்சுவலி காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பபிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஞானதேசிகன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

Views: - 33

0

0