தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடித்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

30 September 2020, 1:50 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடித்தி முடிப்பதற்கான கால அவகாசத்தை டிச.,31ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் விஷால் அணியினரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தனி அதிகாரியின் கண்காணிப்பில் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜுன் 21-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தனி அதிகாரியின் மூலம் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்., 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.