இனி ரேசன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியமில்லை: தமிழக அரசு உத்தரவு….!!!

10 October 2020, 8:24 am
ration - updatenews360
Quick Share

பயோ மெட்ரிக் கருவி சரிவர வேலை செய்யாததால் ரேசன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயோ மெட்ரிக் கருவி சரிவர வேலை செய்யாததால் ரேசனில் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டை தாரர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ரேசன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் குடும்ப அட்டை தாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், பல இடங்களில் பயோ மெட்ரிக் முறை சரிவர வேலை செய்யாததால், ரேசனில் பொருட்கள் வாங்க முடியாமல் பயனாளர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில், அனைத்து கூட்டுறவு மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில் கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால், அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Views: - 92

0

0