கேரளா மட்டுமில்ல தமிழகத்திற்கும் ரெட் அலர்ட்..! பேய் மழைக்கு வாய்ப்பு..!
7 August 2020, 2:26 pmசென்னை : கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், லேசான மழையும் பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை போலவே, இந்த மாதத்திலும் நீலகிரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் அதீத கனமழைக்கான எச்சரிக்கை நீடிக்கப்பட்டே வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்ட மலைப் பகுதிகளிலும் வரும் 10ம் தேதி வரை மழை கொட்டு கொட்டென கொட்டப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேவேளையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, மற்றும் தென்காசியில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டத்தில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.