சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : ஒரே நாளில் 20 மசோதாக்கள் நிறைவேற்றம்

Author: Babu Lakshmanan
13 September 2021, 4:17 pm
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப்பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார். இன்று கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால், மேலும் பல மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று ஒரே நாளில் கடைகள், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 155

0

0