11 ஆயிரத்தை நெருங்கியது தமிழக கொரோனா… பாதிக்கு மேல் சென்னையில் மட்டும்… செங்கல்பட்டுவிலும் பாதிப்பு ஓவர்..!!

Author: Babu Lakshmanan
8 January 2022, 8:25 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாள் பாதிப்பு 8,981ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,997 அதிகரித்து 10,978 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 87 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது.

இன்று 10 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,525 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 10 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று மட்டும் சென்னையில் 5,098 பேருக்கும், செங்கல்பட்டில் 1,332 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், கோவையில் 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 382

0

0