10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் : சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

13 May 2021, 3:51 pm
ma subramanian - updatenews360
Quick Share

சென்னை ; தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக இன்று சித்த மருத்துவர் வீரபாபுவிடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஜி-ஸ்கொயர் மற்றும் கிரடாய் சார்பில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியான, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 100 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புன்ஸ்களுககு இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், “தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்கப்படும்,” என்றார்.

Views: - 141

0

0