இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு… மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதம் விபரம் இதோ…!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 8:26 pm
Quick Share

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரத்தை தற்போது காணலாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. காலை 7 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் காலை முதேலே ஆர்வமாக வாக்களித்தனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், இளம் வாக்காளர்கள் முதல் சீனியர் வாக்காளர்கள் வரை வாக்களித்து வந்தனர்.

மேலும் படிக்க: பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

இந்த நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரத்தை தற்போது காணலாம்.

Views: - 115

0

0