தமிழ்த்துறை வளர்ச்சித்துறை விருது அறிவிப்பு… நாஞ்சில் சம்பத்துக்கு அண்ணா விருது வழங்கி கவுரவிப்பு!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 5:01 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : தமிழ் வளர்ச்சித்‌ துறை விருதுகளுக்கான விருதானவர்களின் பெயர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்‌ மொழி மற்றும்‌ இலக்கிய வளர்ச்சிக்கும்‌ தமிழ்ச்‌ சமுதாய உயர்வுக்கும்‌ தொண்டாற்றிப்‌ பெருமை சேர்த்த தமிழ்ப்‌ பேரறிஞர்கள்‌ மற்றும்‌ தன்னலமற்ற தலைவர்கள்‌ பெயரில்‌, தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. அவ்வகையில்‌ தமிழ்நாடு அரசின்‌ விருதுகளுக்கான விருதாளர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌.

அவ்வகையில்‌, 2021ஆம்‌ ஆண்டிற்கான பேரறிஞர்‌ அண்ணா விருது நாஞ்சில்‌ சம்பத்‌, அவர்களுக்கும்‌, மகாகவி பாரதியார்‌ விருது திரு பாரதி கிருஷ்ணகுமார்‌ அவர்களுக்கும்‌, பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ விருது புலவர்‌ செந்தலை கவுதமன்‌ அவர்களுக்கும்‌, சொல்லின்‌ செல்வர்‌ விருது சூர்யா சேவியர்‌ அவர்களுக்கும்‌, சிங்காரவேலர்‌ விருது கவிஞர்‌ மதுக்கூர்‌இராமலிங்கம்‌ அவர்களுக்கும்‌. தமிழ்த்தாய்‌ விருது மலேசியத்‌ தமிழ்‌ எழுத்தாளர்‌ சங்கத்திற்கும்‌, அருட்பெருஞ்சோதி வள்ளலார்‌ விருது முனைவர்‌ இரா. சஞ்சீவிராயர்‌ அவர்களுக்கும்‌, சி.பா. ஆதித்தனார்‌ திங்களிதழ்‌ விருது உயிர்மை திங்களிதழுக்கும்‌, தேவநேயப்பாவாணர்‌ விருது முனைவர்‌ சூ. அரசேந்திரன்‌ அவர்களுக்கும்‌, உமறுப்புலவர்‌ விருது திரு நா. மம்மது அவர்களுக்கும்‌, கி.ஆ.பெ. விருது முனைவர்‌ ம. இராசேந்திரன்‌ அவர்களுக்கும்‌, கம்பர்‌ விருது திருமதி பாரதி பாஸ்கர்‌ அவர்களுக்கும்‌, ஜி.யு.போப்‌ விருது திரு ஏ.எஸ்‌. பன்னீர்செல்வம்‌ அவர்களுக்கும்‌, மறைமலையடிகள்‌ விருது திரு.சுகி.சிவம்‌ அவர்களுக்கும்‌, இளங்கோவடிகள்‌ விருது திரு. நெல்லைக்‌ கண்ணன்‌ அவர்களுக்கும்‌, அயோத்திதாசப்‌ பண்டிதர்‌ விருது திரு. ஞான. அலாய்சியஸ்‌ அவர்களுக்கும்‌ வழங்கிட ஆணையிடப்‌ பெற்றுள்ளன.

இவ்வாண்டு முதல்‌ விருது பெறும்‌ ஒவ்வொருவருக்கும்‌ விருதுத்தொகை ரூ.1,00.000 லிருந்து ரூ.2.00.000/- உயர்த்தியும்‌ மற்றும்‌ ஒரு சவரன்‌ தங்கப்பதக்கம்‌, விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச்‌ சிறப்பிக்கப்‌ பெறுவர்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 1973

0

0