கொரோனாவால் அலறும் தமிழகம்… 15 ஆயிரத்தை நெருங்கியது ஒருநாள் பாதிப்பு.. இன்று மட்டும் 20 பேர் உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
11 January 2022, 8:29 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 15,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 15,379 பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 29 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 083 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 20 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,043 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 17ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று மட்டும் சென்னையில் 6,484 பேருக்கும், செங்கல்பட்டில் 1,665 பேருக்கும், திருவள்ளூரில் 893 பேருக்கும், கோவையில் 863 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 580 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 236

0

0