தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு : ஆயத்தமாகும் மக்கள்..!

22 August 2020, 6:28 pm
Cbe Sunday LockDown- Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டு வரும் கொரோனா வைரஸ், தமிழகத்தையும் படாதபாடு படுத்தி வருகிறது இதுவரையில் 3.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, வாரம் முழுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியிருந்தாலும், வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மாதத்தின் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நாளை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளை அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவே, இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆனால், நாளைக்கு தேவையான இறைச்சி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இன்றே வாங்க குவிந்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் இன்றே கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனிடையே, முழு ஊரடங்கின் போது அவசர தேவைகளை தவிர்த்து, வெளியே வரும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் 195 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

Views: - 33

0

0