சொந்த கட்சியினரை பார்த்து முதலமைச்சரே பயப்படுகிறார் : பண முதலாளிகள் இல்லாத கட்சி அதிமுதான்…எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 6:17 pm
EPS Criticize - Updatenews360
Quick Share

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும் என்றும், இனி நாற்பது தொகுதியிலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என்றும் திமுக தவறான பொய் பிரச்சாரங்களை பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆத்தூரில் பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து விலகி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். இதுவே அதிமுகவிற்கு மக்கள் வழங்கிய சான்று.

அதிமுகவில் பண முதலாளிகள் இல்லை என்றும், இதில் ஏழை எளிய மக்களின் கட்சியாக உள்ளது. அதிமுகவில் சிறிய தொண்டன் கூட பெரிய பதவிக்கு வர முடியும். திமுகவில் தொண்டர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

திமுக அரசு பதவியேற்று 14 மாதங்களில் இருந்து இதுவரை மக்கள் வெறுப்புடன் இருப்பதாகவும், திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு செல்லும் என்றும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை ஒன்று கூட நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களையே அடிக்கல் நாட்டி வருவதாகவும், திமுக ஆட்சியில் ஒரு திட்டங்களை கூட அறிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் லஞ்சம் என்பது மட்டுமே முதல் சாதனையாக இருக்கிறது.

Edappadipalaniswami_UpdateNews360

தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் பயந்து சில திட்டங்களை கெஞ்சி கேட்பதாகவும், சுயமாக திட்டங்களை அறிவிக்க திறமை இல்லாத நம்முடைய முதல்வர், வேண்டுமென்று திட்டமிட்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் தான் காணாமல் போய்விடுவீர்கள்.

அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவித் திட்டம், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வழங்கப்பட்டது. தற்போது உள்ள திமுக அரசு அதை வழங்காமல் நிறுத்திவிட்டது.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையும் நிறுத்தி வருவதாகவும், தமிழக மக்களிடம் தேர்தலின் போது நீட் தேர்வை திமுக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்யப்படும் என கூறியது.

அப்போது மக்களிடம் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னர், 14 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எந்த பயனுள்ள திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி பேசினார்.

Views: - 622

0

0