அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட திமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து சிறுமி படுகாயம் : பேரம் பேசிய நிர்வாகிகள்!!

Author: Udhayakumar Raman
6 December 2021, 9:48 pm
Quick Share

சேலம்: சேலத்தில் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க நடப்பட்ட திமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து படுகாயம் அடைந்த சிறுமியின் பெற்றோரிடம் திமுகவினர் பேரம் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அரசு நிகழ்ச்சிக்காக சேலம் வருவதை முன்னிட்டு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள திமுகவினரை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே. என் .நேரு திமுக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார் இதனிடையே சேலம் மாநகரம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு அமைச்சர் கே .என் .நேரு இன்று வரவுள்ள நிலையில் அமைச்சரை வரவேற்க திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டது.

இந்நிலையில் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி விஜயா தன்னுடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திமுகவினரால் நடப்பட்ட கொடிக்கம்பம் சரிந்து விழுந்து சிறுமியின் மூக்கு தண்டு உடைந்து உள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திமுக சார்பில் நஷ்ட வழங்குவது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

Views: - 255

0

0