புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு: 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 11:23 am
Theatres Open - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் திரையரங்குகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி கடந்த 1ம் தேதி வெளியான அறிவிப்பில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகலில் இருந்து திரைப்படங்களை திரையிட திரையரங்குகள் தயாராக உள்ளன.


தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்கள் புதுச்சேரியில் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆங்கிலம், வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்களே திரையிடப்பட உள்ளது.

Views: - 620

0

0