போலி காரணத்தை சொல்றாங்க… எங்களுக்கு நீதி கிடைக்கும் : ஆர்எஸ்எஸ் ஊர்வலம் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 12:01 pm
Pon Radha - Updatenews360
Quick Share

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். கமிட்டியை சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் காவல் துறையினர் 50 இடங்களிலும் பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த சூழலில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். என்பதற்காக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் ஐகோர்ட்டை நாடியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து பொன்ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ஊர்வலம் நடந்தால் பிரச்சனை ஏற்படும் என்ற போலி காரணங்கள் கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மேல் முறையீடு செய்திருப்பது முறையான ஒன்று. அதற்கு நீதி கிடைக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்

Views: - 341

0

0