விளம்பரத்திற்காக தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய விவகாரம் : முக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

Author: Babu
2 October 2020, 2:18 pm
stalin - updatenews360
Quick Share

திருவள்ளூர் : தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் தடையை மீறி கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், பொதுமக்களையும் திரட்டி குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று காலத்தில் தடையை மீறி கூட்டத்தை சேர்த்தியதாக முக ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் ஆதாயத்திற்காகவே முக ஸ்டாலின் இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்தியதாக அதிமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Views: - 41

0

0