போதை ஆசாமியை ஃபுட் பால் ஆடிய ட்ராபிக் போலீஸ் : பொதுமக்கள் முன்னிலையில் கொடூர தாக்குதல்… வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 5:11 pm
Police Constable Attacke - Updatenews360
Quick Share

திருப்பதி : போதையில் இருந்த ஆசாமியை ஃபுட்பால் ஆடிய டிராபிக் கான்ஸ்டபிளால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் மது அருந்தி போதையுடன் காணப்பட்ட நபர் ஒருவரை அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கான்ஸ்டபிள் கிஷோர் தீவிரவாதியை நிலைகுலைய செய்வதற்காக பாய்ந்து எட்டி உதைப்பது போல் எட்டி உதைத்து போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார்.

அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் நபரொருவர் மது அருந்தி போதையில் நடமாடி கொண்டிருந்தார். அவரை அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கிஷோர் தீவிரவாதிகளை நிலைகுலைய செய்வதற்காக அதிரடி படையினர் பாய்ந்து எட்டி உதைப்பது போல் உதைத்து கடுமையாக தாக்கினார்.

இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் இவரைப்போன்ற போலீசார் அவர் பணியாற்றும் போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Views: - 392

0

0