ஒரே கழிவறையில் 2 வெஸ்டர்ன் டாய்லெட்… அதுவும் முதலமைச்சர் ஸ்டாலினே திறந்து வைத்த அவலம்… கோவையைத் தொடர்ந்து காஞ்சியில் சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
11 October 2022, 1:23 pm
Quick Share

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்ட திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில் 2 வெஸ்டன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சை உருவாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

Sipcot - updatenews360

இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகையுடன் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து அலுவலர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

selvaperunthagai - updatenews360

ஆனால், புதிதாக கட்டப்பட்ட இந்த திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பொறியாளருக்கு தெரியுமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு வெஸ்டர்ன்களுக்கு இடையே சுவர் எழுப்ப உள்ளதாக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toilet - updatenews360

ஏற்கனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொதுக்கழிவறையில் கதவு கூட இல்லாத ஒரே அறையில் அருகருகே கழிப்பறையை அமைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த கோவை மாநகராட்சி நிர்வாகம், இது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது என்றும், பெற்றோர்கள் பார்வையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கதவு கூட அமைக்கவில்லை என்று கூறியிருந்தது.

toilet - updatenews360

இது ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தாலும், அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட இந்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில், ஒரே கழிவறையில் அருகருகே 2 வெஸ்டர்ன் டாய்லட்களை அமைத்தது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 774

0

0