உங்கள் தொகுதி.. எங்கள் பார்வை : திருவொற்றியூர்

6 March 2021, 11:03 am
Thiruvetriur - 1 - updatenews360
Quick Share

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில் உள்ள 301 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை 3 இலட்சத்து முப்பதாயிரம். இதில் ஆண்களைவிட பெண்கள் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் அதிகம். திமுகவின் பலம் வாய்ந்த கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் திமுக ஆறுமுறை வென்றிருக்கிறது.

அஇஅதிமுக 4 முறையும் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த திமுக வின் கே.பி. சாமி உடல்நலக்குறைவால் இறந்ததால் இப்போது பிரதிநிதி இல்லாமல் தவிக்கும் இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது புதிய பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலாக உள்ளனர்.

கட்சியை தாண்டிய நடுநிலை வாக்காளர்கள் நிறைந்து இருப்பதால் முடிவுகள் அடிக்கடி மாறுகின்றன. தடையில்லா மின்சாரம், அஇஅதிமுக வின் பலமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி பலம் திமுக வின் பலமாக பாவிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அந்த சூழ்நிலையில் கள நிலவரம் புரியும் என்பது யதார்த்தம்

Views: - 13

0

0