டிரம்ப் முன்னிலை பெற்ற மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் : அமெரிக்க தேர்தலில் பரபரப்பு..!!

4 November 2020, 2:15 pm
Donald_Trump_Ohio_debate_UpdateNews360
Quick Share

அமெரிக்க தேர்தலில் பல்வேறு மாகாணங்களில் இழுபறி நீடித்து வரும் நிலையில், 4 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனும் போட்டியிட்டுள்ளனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் என்ற நிலையில் டிரம்ப் 213 இடங்களிலும், ஜோ பிடன் 238 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ‘

இருவருக்கும் இடையே குறைவான வாக்கு வித்தியாசத்தில் இருப்பதால், எஞ்சியுள்ள மாகாணங்களின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதில், ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் உள்ளிட்ட மாகாணங்களில் இழுபறி நிலவி வருகிறது. இழுபறி நீடித்து வந்த அரிசோனாவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பீடன் கைப்பற்றினார். 1996ம் ஆண்டில் இருந்து 5 முறை தொடர்ச்சியாக குடியரசுக் கட்சியே வெற்றி பெற்றிருந்தது. ஜார்ஜியா, மிக்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பென்சில்வேனியா, விஸ்கோன்சிஸ், ஜார்ஜியா, மிக்சிகன் மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இது டிரம்ப் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 24

0

0

1 thought on “டிரம்ப் முன்னிலை பெற்ற மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் : அமெரிக்க தேர்தலில் பரபரப்பு..!!

Comments are closed.