நீட்டை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் : ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2023, 9:02 pm
President Awards - Updatenews360
Quick Share

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன.

நீட் விலக்கு மசோதாவை அமல்படுத்துவதில் உள்ள ஒவ்வொரு நாள் தாமதமும் தகுதியான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்கிறது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக நீட் தேர்வு அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘ NEET எனும் கொடிய துயரத்தை ஒழிக்க நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதமும் ஒன்று! NEET- ஐ ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம்!’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 239

0

0