இனி தான் கொரோனாவின் ஆட்டமே..! உலக சுகாதார அமைப்பின் ஷாக் அறிவிப்பு

30 June 2020, 11:44 am
WHO 01 updatenews360
Quick Share

ஜெனீவா: கொரோனா வைரசின் மோசமான தாக்கமே இனி தான் ஆரம்பிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

6 மாதங்கள் கடந்தாலும் கொரோனாவின் தாக்கம் 200க்கும் நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்  நிலையில், இதன் மிக மோசமான தாக்கம் இனி தான் வர இருப்பதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:

தற்போதைய சூழலில் அரசுகள் சரியான கொள்கைகளை செயல்படுத்த வில்லை. இது மேலும் தொடர்ந்தால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும்.

கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்துள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் சேதப்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் முடிய வேண்டும் என்பது தான் விருப்பம்.

ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும், நியூசிலாந்து போன்ற நாடுகள்  மீண்டு விட்டன என்று கூறினார்.

Leave a Reply