பெண்களுக்கு DRESS CODE எதற்கு? அதற்கு பதிலாக ஆண்களை சரியாக வளர்க்கலாமே : கனிமொழி எம்பி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 3:29 pm
Kanimozhi - UPdatenews360
Quick Share

உலகத்தின் பல்வேறு நாடுகளில் பெண்கள் தங்களது வாக்குரிமை பெறுவதற்காக அடிக்கப் பட்டுருக்கிறார்கள் காயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் – ஏன் கொலை கூட செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பெண்கள் எளிமையாக தங்களது வாக்குரிமையை பெற்றார்கள் – தமிழகத்தில் தான் நீதி கட்சியின் ஆட்சியில், திராவிட இயக்க வரலாற்றை தாங்கிக் கொண்டிருக்கும் நீதி கட்சி ஆட்சியில் தான் 1921ம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டது.

எத்தனையோ போராட்டங்களை தாண்டி தான் இங்க இருக்கும் பெண்களுக்கு படிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கிறது. பெண்களுக்கு கல்வி எல்லாம் அவசியமே இல்லை என்கிற காலகட்டம் இருந்தது.

அப்போது தந்தை பெரியார் போன்றவர்கள், கிறிஸ்துவ அமைப்பினர்கள் பெண்களுக்கும் கல்வி அவசியம் என்று குரல் கொடுத்ததால் தான் இன்று இத்தனை பெண்கள் பட்டம் பெற்று சிறப்பான இடத்தில் இருக்கிறார்கள்.

நான் மாணவிகளுக்கு அறிவுறுத்தல் செய்வது என்னவென்றால் : கல்லூரியில் பள்ளியில் மிகப்பெரிய சாதனைகளை செய்யக்கூடிய மாணவிகள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள்.

என்ன ஆனது என்று கேட்டால் அதற்குப் பிறகு படிப்பை தொடர முடியவில்லை வேலை, எங்களை பணிக்கு அனுமதிக்கவில்லை என்று கூறுவார்கள், ஆனால் தற்போது நான் மாணவிகளை கேட்டபோது அவர்கள் கூறியது நாங்கள் மேற்படிப்பு படிக்க உள்ளோம்,ஐ.ஏ.எஸ் … ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆக உள்ளோம் என்று பல அழகான பதிலை கூறினார்கள்.

தங்களுடைய கனவுகளை பெண்கள் மிகவும் சுலபமாக விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அதை ஒரு தியாகம் என்று கருதுகிறார்கள்.

நம்முடைய இலக்கு, நம்முடைய சிந்தனை, நம்முடைய கனவு உழைப்பு என்ன என்பதனை உணராமல் அனைத்தையும் அன்பிற்காக … குடும்பத்திற்காக … விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் – ஆனால் உங்களுடைய கனவை நோக்கி நீங்கள் பயணித்து இலக்கை அடைவது தான் அடுத்த தலைமுறை பெண்களுக்கு நீங்கள் அளிக்கும் பரிசாக இருக்கும்

பெண்கள் என்றால் கண்டிப்பாக டிரஸ் code ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. மாறாக ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும்.

ஒரு பெண் என்ன உடையை உடுத்திக் கொண்டாலும் நீ சரியாக நடந்து கொள்ள வேண்டும் – its not my duty to care off you என பேசினார்.

Views: - 280

0

0