தேசிய விளையாட்டு போட்டிகளில் யோகா சேர்ப்பு : மத்திய அமைச்சகம் ஒப்புதல்

17 December 2020, 7:50 pm
Quick Share

இந்திய விளையாட்டு போட்டிகளில் யோகாவையும் சேர்க்க, மத்திய அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது.

யோகாவை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியதாவது :- கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யோகாசனம் என்பது யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான அங்கம். யோகா தேசிய விளையாட்டு போட்டியில் சேர்க்கப்பட்டதால், நிறைய இளைஞர்கள் பயன்பெறுவார், எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு பேசுகையில், “போட்டிகளில் யோகா சேர்க்கப்பட்டிருப்பதால், உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே யோகா மீதான ஆர்வம் அதிகரிக்கும். எந்தவொரு விளையாட்டின் நோக்கமும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான்,” என்றார்.

Views: - 0

0

0