இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து : இளைஞர்கள் உட்பட 3 பேர் பலி.. திருமண நிகழ்வுக்கு சென்ற போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 4:11 pm
Accident 3 Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் ரங்கநாதன். இவர் சென்னை புரசைவாக்கத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

இதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ரமேஷ் . இவர் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் திண்டிவனம் அடுத்த இரட்டணையில் நடைபெறுகின்ற திருமண நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் திண்டிவனம் அடுத்த கொள்ளார் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் மீது லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

இதே போன்று வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் அடுத்த இளங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Views: - 398

0

0