அம்மி, உரல் மண் சட்டி: முதல்வர் வீட்டு எளிமையான கிட்சன் – Home Tour வீடியோ வைரல்!

Author: Shree
13 March 2023, 11:10 am
durka stalin dpn
Quick Share

அம்மி, உரல் மண் சட்டி முதல்வர் வீட்டு எளிமையான கிட்சன் – Home Tour வீடியோ வைரல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி துர்கா ஸ்டாலின் அவர்களை திருமணம் செய்து கொண்டார். துர்கா ஸ்டாலின் திருமணம் ஆனதில் இருந்து தற்போது வரை மிகவும் ஹோம்லியாக லட்சணமான குடும்ப பெண்ணாக அந்த குடும்பத்தை பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் வீட்டு லேட்டஸ்ட் Home Tour வீடியோ அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த டெக்னலாஜி உலகத்தில் பிரபலங்கள் வீட்டு கிச்சன் என்றாலே வித விதமான ஹை க்ளாஸ் பாத்திரங்கள், அலங்கார பொருட்கள், வெளிநாட்டு பொருட்கள் என நிரம்பி வழியும்.

ஆனால், அது எதுவுமே இல்லாமல் சாதாரண வீடு போன்றே அம்மி, உரல் , மண் சாதிய சமையல் என மிகவும் எளிமையாக வைத்து , சத்தான உணவை சமைத்து கொடுக்கிறாராம். அதிலும் குறிப்பாக வேலையாட்கள் யாரும் இல்லாமலே அவர் தனியாவே சமைக்கும் இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணம் ஆன புதிதில் ஸ்டவ் அடுப்புதான் இருந்ததாம், சில சமயங்களில் விறகு அடுப்பில் கூட சமையல் செய்திருக்கிறாராம். ஸ்டாலின் மனைவி வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து இவ்வளவு எளிமையா இருக்காங்களே என எல்லோரும் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.

Views: - 639

1

0