வடிவேலு காமெடி போல நடந்த உண்மை சம்பவம் : போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த திருடன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 2:16 pm
Lake Thief Arrest -Updatenews360
Quick Share

ஆந்திரா : போலீஸிடம் இருந்து தப்புவதற்காக ஏரியில் குதித்த சங்கிலி பறிப்பு கொள்ளையன் வசமாக சிக்கினான்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புக்கராயசமுத்ரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

சங்கிலியைப் பறிகொடுத்த பெண் எழுப்பிய அபயக் குரலை கேட்டு அந்தப் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருடனை விரட்டி சென்றனர்.


போலீசார் தன்னை தொடர்ந்து விரட்டி வருவதைப் பார்த்த திருடன் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அந்த பகுதியில் உள்ள ஏரியில் குதித்து விட்டான். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற போலீசார் ஏரியிலிருந்து திருடனை மீட்டனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 747

0

0