துவண்டு கிடந்த விக்னேஷ் சிவன்.. முதுகில் தட்டிக் கொடுத்த நயன்தாரா.!

Author: Rajesh
29 April 2022, 2:48 pm
Quick Share

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் இவரது இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்றது. பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு போது நயன்தாரா மற்றும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 6 வருடங்கள் கடந்து இந்த காதல் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள். நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக நயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது, அதிகம் கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் விக்னேஷ் சிவன் – நயன் தம்பதி இவர்களது ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி கதையை மையமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் பேசியபோது, நானும் ரவுடி தான் திரைப்படத்தை வெற்றி படத்தை கொடுத்த பின் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம் என கூறியிருந்தார்.
அதன்படி, படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது விக்னேஷ் சிவன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள தங்கமே, கண்மணி, என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி! நான் துவண்டு கிடக்கும் போதெல்லாம் நீ முதுகில் தட்டிக் கொடுப்பதற்கு நன்றி .. நீதான் எனக்கு கிடைத்த வெற்றி !!! என் கண்மணி.. என உருகி கூறியிருக்கிறார்.

Views: - 647

5

3