அந்த பொண்ணு பண்ணுது உனக்கு என்ன.? பிரபல இயக்குனரிடம் திட்டு வாங்கிய விஜய்..!

Author: Rajesh
11 May 2022, 5:05 pm
Quick Share

இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தமிழகத்தில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய பிரபல நடிகை சங்கவி, விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட நட்பினால், விஜய், சங்கவியை காதலிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்ட காலமும் இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சங்கவி கூறியதாவது, ‘விஜய் எப்போதுமே அமைதியான மனிதர். அவர் தனிமையில்தான் அதிக நேரம் செலவிடுவார். விஜய் தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது கடின உழைப்பு தான்.


ஒருமுறை விஷ்ணு படத்திற்காக மூணாறு சென்றிருந்தோம். அங்கு தண்ணீர் செம ஜில்லுனு இருந்தது. அப்போ படத்தோட இயக்குனர் எஸ்ஏசி சார் திட்டுவாருன்னு பயந்துட்டு நான் தண்ணீல இறங்கிட்டேன். ஆனா விஜய் ரொம்ப ஜில்லுனு இருக்குனு தயங்கி நின்னுட்டு இருந்தாரு.

என்னதான் எஸ்ஏசி சார் விஜயோட அப்பாவா இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் ரொம்ப ஸ்ரிக்ட். அதனால கோபப்பட்ட எஸ்ஏசி சார், ‘அந்த பொண்ணே இறங்கிடுச்சு உனக்கு என்ன’ அப்படினு சொல்லி விஜய திட்டுனாங்க. என்னால அவரு திட்டு வாங்கிட்டாருனு நினைச்ச ரொம்ப கஷ்டமா இருந்தது’ என விஜய் உடனான தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை நடிகை சங்கவி பகிர்ந்துள்ளார்.

Views: - 671

2

0