கமல் மற்றும் கார்த்தி படத்தின் டாப் சீக்ரெட்.. விஜய் கேமியோ ரோல் கன்ஃபார்ம்..!

Author: Vignesh
12 February 2024, 3:37 pm
lcu vijay
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh vijay - updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என கூறப்படும் LCU-வில் கமல் மற்றும் கார்த்தியின் படம் இணைந்துள்ளது அனைவரும் அறிந்த விஷயமே, இந்நிலையில், லியோ படத்தை தொடர்ந்து விஜய் LCU-வில் இருப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்குள் அவர் இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன் அரசியல் முழுமூச்சுடன் களமிறங்கப் போகிறேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

vikram 2

இதனால், இனி விஜய் எப்படி LCU-வில் வருவார் என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விக்ரம் 2 மற்றும் கைது 2 படங்களில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. அதற்கான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் முன்பே எடுத்து விட்டாராம்.

lcu vijay

இதனால், லியோ படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் 2 மற்றும் கைதி 2 படத்திற்கு தேவையான காட்சிகளை விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், விக்ரம் 2 மற்றும் கைது 2 படங்களில் விஜய்யின் காட்சிகள் இடம்பெறும் என்ற தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அது கண்டிப்பாக செம மாஸாகத் தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Views: - 189

0

0