குறித்த தேதியில் வெளியாகுமா விக்ரம்.? மீண்டும் சூட்டிங் கிளம்பி ஷாக் கொடுத்த படக்குழு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
8 May 2022, 3:08 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி ஹீரோக்கள் வில்லன்களாக நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்இ தற்போது ரசிகர்களுக்கு ஷாக் தரக்கூடிய செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் பட குழுவினர் தற்போது மீண்டும் ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் அப்போ இன்னும் ஷூட்டிங் முடியலையா ரிலீஸ் தேதி தள்ளிவைத்து விடுவார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களின் மனதில் கேள்வி எழுந்தது.

படத்தின் ப்ரோமோ காட்சிகளுக்காக எடுக்கப்படும் காட்சிகள், ப்ரோமோ பாடல்களுக்கான ஷூட்டிங் தான் விரைவில் நடக்க உள்ளது. மற்றபடி பட ஷூட்டிங், எடிட்டிங், பாடல் பதிவு என எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன என்ற செய்தி தான் தற்போது வெளியாகியுள்ளது.

Views: - 672

0

0