திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச டிக்கெட் பெற வேண்டுமா? தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 9:00 pm
Tirupati Temple - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க தேவையான 300 ரூபாய் டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இன்று காலை 9 மணிக்கு நாளொன்றிற்கு 12,000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகளை பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் பிப்ரவரி மாதம் முழுவதற்குமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடப்படும்.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்யலாம்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.

Views: - 568

0

0