சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி. ராஜேந்தர்.. ட்டுவிட்டர் பக்கத்தில் சிம்பு தகவல்.!

Author: Rajesh
24 May 2022, 5:56 pm
Quick Share

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவர் நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ தந்தைக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்கிறோம். வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் முழு சுயநினைவுடன், நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்தவுடன் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கு, அனைவரின் அன்புக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 456

0

0