ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.. பதில் தர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை : கரு நாகராஜன் கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 5:26 pm
Karu NAgarajan -Updatenews360
Quick Share

ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.. பதில் தர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை : கரு நாகராஜன் கருத்து!

சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி சேலையில் ஊழல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் தமிழக பாஜக சார்பில் துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட புகார் மனு கொடுத்துள்ளனர்

பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு, திமுக அரசு ஊழலை ஒன்றொன்றாக கொண்டு சென்று தமிழக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக files 1,2,3 ஆ ராசா, கனிமொழி, சபரிசன் ஆடியோ விகாரம் என அனைத்தையும் குறிப்பிட்டு வருகிறார்.

அமைச்சர் காந்தி ஊழலை குறிப்பிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளோம்.67 கோடி ஊழல் நடந்திருக்கிறது. அரசாங்கம் விலையில் இருந்து 160 ரூ வித்தியாசம் வருகிறது.

காட்டன் பயன்படுத்துவதற்கு பதில் 78% பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.1.68 கோடி ஜவுளில் ஊழல் நடந்திருக்கிறது.

320 ரூபாய் காட்டனுக்கு பதில் 160 குறைவு விலையில் பாலிஷ்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பொங்கல் தொகுப்பாக பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வேஷ்டி, சேலையில் 70 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.260 ரூபாய் மதிப்பீட்டில் கிடைக்கும் காட்டனை 320 ரூபாய் என அரசு கூறியுள்ளது

சட்டமன்றத்தில் ஆளுநர் 4 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குறித்த கேள்விக்கு,

ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டமன்றத்திற்கும் ஆளுநருக்கு தமிழக அரசிற்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு பாஜக பதில் தர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்

Views: - 107

0

0