ஹைதியில் அடுத்தடுத்து 3 முறை கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி…தரைமட்டமான 200 வீடுகள்..!!

Author: Rajesh
25 ஜனவரி 2022, 12:04 மணி
Quick Share

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த நிலையில் 200 வீடுகள் சேதமடைந்துள்ளது.

Image

தென்மேற்கு ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லெஸ் கேய்ஸ் நகரில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மேலும் 4.4 மற்றும் 5.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர்.

Image

சுமார் 200 வீடுகள் தரைமட்டமானது. 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளை இழந்த மக்களுக்கு உதவ அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 4737

    0

    0