178 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்… பூமியே இருளாகப் போகும் அரிய நிகழ்வு ; வானியலாளர்கள் சொல்வது என்ன..?

Author: Babu Lakshmanan
14 October 2023, 9:05 am
Quick Share

178 வருஷத்திற்குப் பின் நடைபெறும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனை இந்தியர்கள் காண முடியாது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை நடக்க இருக்கிறது. இது மிகப்பெரிய கிரகணம் என்பதால், இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த அற்புத நிகழ்வை காண முடியும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓஹியோவில், சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்கத் தொடங்கும் போது, மரங்களின் கீழ் நிழல்கள் மாறுவதைக் காணக்கூடியவாறு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பகலில் நடக்கும் இந்த நிகழ்வின் போது, வெப்பமும், குளிர்மையும் சேர்ந்த ஒரு வித்தியாசமான சூழல் நிலவும் என்றும், இந்த மாற்றத்தால் விலங்குகள் வித்தியாசமாக செயல்படும் என்றும் வானியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கதிர்வீச்சுத் தாக்கம் அதிகரித்திருப்பதனால் இந்த கிரகணத்தை சாதாரண வெற்றுக்கண்ணால் பார்வையிடுவதும், சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கிரகணத்தை பார்வையிட வேண்டும் என் எச்சரிக்கின்றனர்.

Views: - 700

0

0