சிறுத்தையுடன் Safari Guide எடுத்த செல்ஃபி… வைரலாகும் வீடியோ… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 3:58 pm
Quick Share

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைகள், 70 ஆண்டுகளுக்கு பிறகு, நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. மொத்தம் கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளில் ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள் ஆகும்.

இந்தச் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளன. இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் நடமாடுவது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக எழுந்தது.

இந்த நிலையில், வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்த வீடியோவில், Safari Guide ஒருவர் சிறுத்தையின் அருகில் நின்று ஆபத்தான செல்ஃபி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘African Selfie… Cheetah style’ எனும் தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஜீப்பில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வனப்பகுதியில் சுற்றுலா சென்ற வழிகாட்டி (Safari Guide) ஒருவர், சிறுத்தை இருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவர்களின் வாகனத்தை நெருங்கி சிறுத்தை வருவதை அந்த ஜீப்பில் இருக்கும் அனைவரும் செல்ஃபி எடுக்கின்றனர்.

அப்போது, வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், சூடு தாங்காத சிறுத்தை ஜீப்பின் மேல் பகுதியில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் மிரண்டு போன நிலையில், அந்த வழிகாட்டி, சிறுத்தையின் அருகில் சென்று ஆபத்தான செல்ஃபியை எடுத்துள்ளார். இதனை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் பீதியில் உறைந்து போய் விட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஆபத்தான செல்ஃபி எடுத்த வழிகாட்டியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Views: - 1101

0

0