“கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

Author: Vignesh
7 November 2022, 10:29 am
KAMAL HAASAN_updatenews360
Quick Share

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.

kamal-haasan-updatenews360

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 337

0

0