இரங்கல் தெரிவிப்பதில் கூட பெருமை தேவையா? மனோ பாலாவுக்கு சர்ச்சையான இரங்கல் தெரிவித்த இளையராஜா!

Author: Shree
4 May 2023, 8:28 pm
mano bala ilayaraja
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மனோ பாலாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, ”என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நண்பர் நடிகர், இயக்குநர் மனோபாலா காலமான செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் சொந்தமாக இயக்குனர் ஆனார்.

என்னை ரோட்டில் சந்தித்து தேதிக்காக வாய்ப்பு கேட்ட எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டுகின்ற நேரத்தில் பாலத்தில் நான் வருகின்ற நேரத்துக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். பின்னர் நடிகரானாலும், இயக்குநரானாலும் அவ்வப்போது வந்து இசை ரெக்கார்டிங் நேரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்” என்று பேசினார். இதனை கேட்ட ரசிகர்கள் மறைந்த மனிதனுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது கூட தற்பெருமை அவசியமா? என கேட்டு இளையராஜாவை விமர்சித்துள்ளனர்.

Views: - 7011

301

274