குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த வீட்டிலே நலுங்கு மாவு செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
9 May 2022, 6:34 pm
Quick Share

நம்முடைய சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை, கரும்புள்ளிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும் என்று சிலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள், லோசன்கள் போன்றவற்றை உபயோகப்படுத்துகின்றனர். அவை அனைத்தும் செயற்கை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது . இதனை பயன்படுத்துவதால் சருமத்தில் பலவிதமான பிரச்சனைகள் தான் ஏற்படும். இதற்கு சரியான தீர்வு இயற்கையாக கிடைக்கக்கூடியவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. அதற்கு நலுங்கு மாவே சிறந்ததாகும்.

நலுங்கு மாவு தயாரிக்கும் முறை:
கடலைப்பருப்பு
பச்சை பயறு
கஸ்தூரி மஞ்சள்
பன்னீர் ரோஜா இதழ்கள்
ஆவாரம் பூ

செய்முறை:
கடலைப்பருப்பு, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், பன்னீர் ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயிலில் உலர்த்தவும். பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். பின் காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து தேவையான போது உபயோக்கவும் .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நலுங்கு மாவை உபயோகிக்கலாம். இந்த நலுங்கு மாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை, பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து விடும். வியர்வை துர்நாற்றம் பிரச்சனை‌உள்ளவர்கள். இந்த நலுங்கு மாவை தொடர்ந்து பயன்படுத்துங்கள்

நலுங்கு மாவை உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் நலுங்கு மாவு ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

அப்படி இல்லை யென்றால் குளிக்கும் போதும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

நலுங்கு மாவு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

* நலுங்கு மாவு பயன்படுத்துவதால் முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

* முகம் பொலிவுடன், பளபளப்பாகவும் இருக்கும்.

* சரும பிரச்சனைகள் மற்றும் வியர்வை துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

* சருமத்தில் எண்ணெய் பசை குறையும். வியர்க்குரு தொல்லையும் இருக்காது.

*சருமத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், சருமமானது புத்துணர்ச்சியுடனும், வாசனையாகவும் இருக்கும்.

குறிப்பு:
நலுங்கு மாவு தோலுக்கு எந்த பக்கவிளைவு ஏற்படுத்தாது, என்றாலும். குழந்தைகளுக்கு பயன்படுத்தும்போது சோதனை செய்த பின் உபயோகிப்பது நல்லது.

முக்கியமாக ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

இப்படி இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த நலுங்கு மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

Views: - 2740

0

0