“எம்.எஸ்.எம்.இ’களுக்கு அவசர கால கடனை மறுத்தால்..”..! வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை..!

31 July 2020, 5:17 pm
NIRMALA_SITHARAMAN_UpdateNews360
Quick Share

இந்திய வர்த்தகக் கூட்டமைப்புகளில் ஒன்றான பிக்கியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர கடன் வசதியின் கீழ் உள்ள எம்.எஸ்.எம்.இ.’களுக்கு வங்கிகளால் கடன் மறுக்க முடியாது என்று கூறினார்.

வங்கிகள் அத்தகைய கடனை மறுத்தால், எம்.எஸ்.எம்.இ.’க்கள் உடனடியாக புகாரளிக்க வேண்டும் அதை தானே நேரடியாக கையாள உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேலும் பேசிய அவர், தற்போதைய நிலைமையைச் சமாளிக்க அறிவிக்கப்பட்டு, எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பங்குதாரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் முழுமையான ஆலோசனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

அவர் மேலும், மறுசீரமைப்பில் கவனம் செலுத்துவதாகவும், இது குறித்து ரிசர்வ் வங்கியுடன் நிதி அமைச்சகம் தீவிரமாக விவாதித்து வருகிறது என்றும் உறுதியளித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கள், சேவைத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக உள்ளது. இத்துறையின் கவலைகளை நிவர்த்தி செய்த நிதியமைச்சர், தடை நீக்கம் அல்லது மறுசீரமைப்பு தொடர்பான துறையின் தேவைகளை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும் அது ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் கூறினார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு பரஸ்பர நலன் முக்கியமானது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியா தனது சந்தைகளைத் திறந்த நாடுகளுடன் பரஸ்பர ஏற்பாடுகளைக் கேட்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பரஸ்பரம் ஒரு மிக முக்கியமான கட்டம் என்று அவர் மேலும் கூறினார்.

அபிவிருத்தி நிதி நிறுவனத்தை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

முன்னதாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், மோசமான கடன்களுடன் போராடும் வங்கிகளால் நிதியளிக்க முடியாது என்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply