பாரதி ஏர் டெல் நிறுவனம் : கடன் பத்திர சந்தை மூலம் நிதி திரட்ட திட்டம்

20 March 2020, 9:04 pm
AIRTEL-UPDATENEWS360
Quick Share

பாரதி ஏர் டெல் நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திற்கு அளித்திருந்த விரிவான விபர அறிக்கையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குதாரா்கள் அனைவரையும் கொண்ட கூட்டமானது, நடைபெற்றது.

பங்குச் சந்தையின் மூலமாக 200 கோடி டாலரும், கடன் பத்திர சந்தையின் மூலமாக 100 கோடி டாலரும் திரட்டப்படுகின்ற திட்டங்கள் அனைத்துக்கும் அனுமதி கோரப்பட்டது என்றும், தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், பாரதி ஏர்டெல் நிறுவனமானது கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலமாக, 200 கோடி டாலா் வரையிலும் பெறுகின்ற வகையிலான நிதியாதார பெருக்க திட்டங்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு. 99.99 % சதவிகிதம் பங்குதாரா்களின் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் விபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்நியச் செலாவணியின் மதிப்பில், பங்குகளாக மாற்றிக் கொள்ளுகின்ற வகையில் கடன் பத்திரங்களை வெளியிடுகின்ற பாரதி ஏர்டெல் நிறுவனத்தின், இரண்டாம் நிதியாதாரம் பெருக்குவதற்கான திட்டத்துக்கும், சிறப்பு தீா்மானத்தின் மூலம் பங்குதாரா்கள் அனைவரின் ஆதரவும், பெற்றுக்கொள்ளப்பட்டது